Tag Archives: கவிதைகள்

தெபாகா வீதிகளின் இராட்சத மரங்கள்

ச.விசயலட்சுமி இலவமரப் பூக்களென செம்பிழம்பாயிருக்கும் மண்ணின் ஈரம் மணம் வீசிக்கொண்டிருக்கிற நிலத்தின் ஆதிக்குடிகளாயிருந்தோம் ஒப்பனையற்றதொரு முகத்தில் தொய்யில் எழுதி மலர்சூட்டி ஆராதித்த பொழுதொன்றில் மறைத்திருந்த ஆயுதங்கள் துளிர்விட்டன பழுப்பு நிற சருகின் ஒலிக்குள் புதைந்திட்ட சிரிப்பலைகள் பாண்டியாட்டத்திற்கு கட்டம் கட்டியாடியவர்களுக்கு புதிதாய் விரிந்தன அச்சத்தின் சாரம் ஆற்றுமணற்படுகைகள் சூறையாடிய இரவின் காரிருள் பொழுதொன்றில் வல்லமை திரள் … Continue reading

Posted in அனைத்தும், கவிதைகள் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

முஸ்தீபுடன் இளைப்பாறுதல்

This gallery contains 1 photo.

அவசரத்தின் பொருட்டாய் தொடங்கிய பயணத்தினை பேருந்தில் ஆரம்பித்தேன் பின் வந்த இதே இலக்கமுள்ள நான்கு அதிவிரைவாய் கடந்து முன்னேறின கடுப்போடு சன்னலின் வெளியே பார்க்க மருத்துவமனை நிரம்பிவழிந்துகொண்டிருந்ததது புறநோயாளிகள் முகமெங்கும் பதற்றம்  . டாஸ்மார்க் கடை கல்லாவில் காந்தித்தாத்தா புன்னகையோடிருந்தார் நேற்றின் எச்சங்கள் புதுக்கோளமிட்டிருக்கின்ற ஓட்டல் மெனுபட்டியலை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கிறான் டிபார்ட் மெண்டல் ஸ்டோரில் பிதுங்கி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

சித்தார்த்தனின் புறா

This gallery contains 1 photo.

வெண்ணிற சிறகுகளை விரித்து சென்றது படபடத்து செல்லும் அதன் உயிர்க்கூட்டில் குவிந்துகிடக்கின்றன ஆசைகள் உன்னிலிருந்து உதிரும் இறகுகளைப்போல் உதிர்த்துவிடு பாரத்தினைத்தாங்காமல் திணருவாய் சித்தார்த்தனின் குரலினை சட்டைசெய்யாமல் முடிந்தால் உன் நிர்வாணத்தினை தூக்கி எறி அதன் தாங்கமுடியா கணத்தை சர்வமும் தூக்கித்திரிகிறாயென்றது வணிக வளாகத்தின் பொந்துகளில் அமர இடம் தேடிக்கொண்டிருந்த குனுகுக்குரலில் சர்பத்தின் விஷப்பை மறைந்துகொண்டிருந்தது  . … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தோற்றப்பிழை

This gallery contains 1 photo.

. . நான் தென்றல் மாயப்பேய் மழைத்துளி சிலந்தி வலை அல்லது காலத்தை மீறி வளர்ந்து நிற்குமொரு செடி குருதியின் ஈரம் குடித்த மலர் நிலம் நீர் ஆகாயம் எல்லாமாகவும் உருவகிக்க செய்யுமுன் சொற்கள் என் உடலுக்குள்ளாகவிருக்கும் இன்னுமொரு உடலை எப்பொழுதும் உணர்ந்தவனில்லை நீ நானும் முயன்றேன் உன்னை நிலாவெனவும் நட்சதிரமெனவும் ஏதேனுமொரு வார்த்தையில் அன்பு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

நிலா.ச.விஜயலட்சுமி கீற்றுக் கவிதை

This gallery contains 1 photo.

கடந்த பெளர்ணமியில் பேசிய நினைவின் நொடியில் என்னுள் வளரத் தெடங்கியது நிலா . தோழிவீட்டு வாசலில் திருட்டுக்குப் பயந்து தாலியை அஞ்சறைப்பெட்டிக்குள் ஒளித்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தோம் . நள்ளிரவுவந்த குறுஞ்செய்தியொன்று சன்னலில் நிலா என்றது . செல்பேசியில் பதுக்கிவைக்கப்பட்ட நிலவைத் தேடுகிறேன் . நிரந்தரமற்ற வீட்டில் குடியிருப்பவனைப்போல் புன்னகைக்கின்றன குளிரூட்டப்பட்ட அறைச்சுவரெங்கும் பசையிடப்பட்ட விண்மீன்களும் பிறைநிலவும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உப்பாகிடும் உடலில்

This gallery contains 1 photo.

    தொடர்ந்து கேள்விகளால் அறையப்பட்டுக் கொண்டிருக்கிறேன் கேள்விகள் மரப்பிசினைப்போல நசநசக்கின்றன விடையுள்ளவைகளும் விடையற்ற தருணங்களுமாய் மற்றுமொரு கேள்வியை தடுத்துவிட முடிவதில்லை கேட்டுவிட்டுப் போங்கள் எதிர் கேள்விகளை தூசுதட்டி எடுத்துக் கொண்டிருக்கிறேன் கொத்து வெடிகளும் நிலக்கண்ணிகளும் சந்தித்துக் கொள்ளட்டும் சுவாசத்தின் முடிச்சுகளெங்கும் கந்தகத்தின் வாசம் கடலின் நீர் முழுவதையும் வெளியேற்றிவிடத் துடிக்கிறேன் உப்புக்கரிக்கிறது உடலில் சுழன்றடிக்கும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கூட்டியக்கம்

This gallery contains 1 photo.

  கடிகாரம் சுற்றிக்கொண்டேயிருக்க விவரிக்கவியலா விடைகளற்ற கேள்விகள் நெஞ்சை நிறைத்து வழியும் கேள்விகள் மண்புழுக்களைப்போல் இரவுகளைக் கிளறிக்கொண்டேயிருக்கின்றன பகலில் உள்ளொளிந்து கிடக்குமவை இருட்டில் மட்டும்  தலைநீட்டுகின்றன துளைக்கப்படும் பொழுதுகளில் சலனமற்ற வெறுமை படர்ந்திருக்கும் அதனை அப்புறப்படுத்த கோடாரிகளையும் பயன்படுத்தியாயிற்று நிறைந்திருக்கும் வெறுமை மிகநுண்ணிய சங்கிலியைப்போல கேள்வியின் கணுக்களால் பிணைக்கப்பட்டிருக்கிறது கடிகாரம் காலையை நினைவுறுத்த அலறிக்கொண்டிருக்கிறது விழிக்கும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்