நிலாப்பூவும் நீலாம்பரியின் வேதமும் அல்லது தீநடம்

சக குமாரத்திகளின் பாடு-1
 
தாளாதொரு பெரும் வலியின் சுமை
லகுவாய் கோடிநட்சத்திர ஒளிர்தலின் கனவில்
கரைத்துக் கொண்டிருக்கிறாள்
திரவம் பீறிட தத்தித்தகவென
உந்திச்சுழிக்குள் ஊழியின் தாண்டவம் நிகழ்த்தி
வெளிவந்து கொண்டிருக்குமது
புதுத்திறப்பில் வந்து வீழ்ந்து அலற
நட்சத்திரங்கள் பனித்துளிகளாகி
கண்களில் சுரந்து கொண்டிருக்கிறது
பால்வாசனைக்குள்  நிலாப்பூ
சக குமாரிகளாக உணர்வோரின் பதிவு-2
 
பாரதக்கதையின் பெரும் பாத்திரமென்றும்
அர்த்தநாரீஸ்வரக் கடவுளென்றும்
கொண்டாட்டப்பட்டும்
எருக்கிலைப்பாலின் காய்ப்புகள் சூடித்திரிகிறோம்
நஞ்சருந்திய குழந்தைகளாய் எங்களுடல்
பெரும் மதுக்குடித்த எதுக்களிப்பில்
பிளிறும் காட்டெருமைகளாய்
வேட்டையாடத் துரத்தப்படும் பினியுற்றதொரு மிருகமாய்
வரலாறுகளின் பிரதிகளில் வேதங்களின் நுனியில்
துண்டாடப்பட்டதொரு பாலினம்
தான் யாரென்ற அவதானிப்பில் ஞானிகளும்
மக்கள் புத்தம் புதிதாக கடவுளரும் உருவாவதைப் பார்க்கிறவர்கள்
யாரெனத்தெரியாமல் திணருகிறோம்
இலுப்பை மரங்களைப்போல் சலசலத்துக் கிடக்கிறவர்களின் உழைப்புகளோடு குமாரத்திகளின் நறுமணம்
தடமற்றதொரு காலத்தின் வெளியெங்கும் இழைந்திருக்கும்
சக குமாரியென அறிவிக்கக் கடவதாக-3
 
அண்டங்கள் முழுதும் பிரழுமொரு மாயத்தனமாய்
உருவானதொரு உடல் பிரித்துப் போடுகிறது
ப்ரபஞ்சத்தின் இரு வார்ப்புகளுள் பொருந்திப் போகாது
இசைத்தட்டுகளின் ஆர்ப்பரிப்பு களியாட்ட அரங்குகளின் எக்காளம்
பரிகாசங்களின் உச்சாடனம் வர்த்தகத்தின் பிரதியாய்
பாலியல் முத்திரையான இராச இலச்சினை மட்டும் வசப்பட்டிருந்ததைக் கடந்து
பிதுங்கிக் கிடக்கிறவர்களின் குரல்
வானுயர வெடித்து
இந்நூற்றாண்டின் திசையெங்கும் மோதுகிறது
களிநடம்புரிய ஊழியோடு கைப்பிணைந்து ஆடுகிறோம்
தத்திகட தத்திகட தித்தோம்
ஜனிப்பின் சூட்சுமப்புள்ளிகள்-4
 
வேறாய் உணர்ந்த பதின்மங்களைக் கடந்து
கூட்டுச்சித்திரமாய்
தமக்கான உடலைத்தானே வரைகிறார்கள்
நெருப்பில் குழைக்கப்பட்ட வர்ணங்களில் கரைந்து
விருப்பம் கொள்ள முடியா உறுப்பொன்று
உதிர்கிறது உடல்களைக் கடந்த உடலாய்
பேருருவம் கொண்டிருக்கும் அர்த்தநாரீஸ்வர உடல்
வலிகளுக்கு வலிகளைப் பரிமாறி
நலினங்களோடான ஆம்பலவிழ மலர்த்துகிறார்கள்
மாயத்தனத்திலிருந்த பிணைப்பிலிருந்து
மானுடப்பிறவியென உணர்த்த காட்டுக்கிழங்கென
உப்பில் இடப்பட்ட வலிகளை சேமித்து
திசைகளின் இலயங்களோடு
நீலாம்பரிகளின் தீநடம் திக்கெங்கும் நிகழ்கிறது
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
……………………………………………………………………………………………….ச விஜயலட்சுமி
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in கவிதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to நிலாப்பூவும் நீலாம்பரியின் வேதமும் அல்லது தீநடம்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s