மருதம்

ச விஜயலட்சுமி
தோழி மருதாம்பாளுக்கு சமர்ப்பணம்

 

நூல் வெளியீடு குறித்து ஆர்வமற்ற மனநிலை தோழி கவின்மலருக்கு ஏற்பட்டவிபத்தினால் தோன்றியது.புத்தகக் கண்காட்சியில் நண்பர்களோடு வெளியிட நினைத்திருந்தேன்.தோழி சந்திரா அவளது வெளியீடுகுறித்து பேசிய சில நிமிடங்களில் அடுத்த நாளுக்கு விடுப்பு எடுப்போம் புத்தக கண்காட்சிஅரங்குக்கு செல்வோமென நினைத்திருந்தேன்.அதிகாலை தோழியின் மரணச்செய்தி.அவளோடு பேசிக்கொண்டிருந்த தருணங்கள் நினைவில் அலைந்தது.அன்றே அடக்கம் என பேசிக்கொண்டிருந்த செல்பேசியோடு பணியிடம் சென்றேன்.அன்று பல மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்க வேண்டிய ஆயத்த பணி.அவசர ஆத்திரத்திற்குக் கூட தொலைபேசமுடியாமல் மாலை தாமதமாக பள்ளியிலிருந்து விடுவித்துக்கொண்டு பேருந்து ஏறியதும் துயரம் அடங்க மாட்டாததாயிருந்தது. தோழிகள் சந்திராவின் வெளியீடும் உமாசக்தியின் வெளியீடும் நான் சென்று நின்ற தருணத்தில் மகிழ்ச்சியாய் முடிந்திருந்தது.நேசமித்திரனோடும் லட்சுமி சரவணகுமாரிமும் வெளியீடு வைக்கும் மனநிலை இல்லை என்று சொன்னேன்.நேசமித்திரன் இந்நிகழ்வை அவருக்கு சமர்பிப்போமே என்றார்.வெளியிடுவது குறித்து முடிவெடுத்தது என் வேலைகள் முடிந்த இரவில் நண்பர்களுக்கு தகவல் சொல்லத்துவங்கினேன்.வெளியிடுவது குறித்து எழுத்தாளர் பிரபஞ்சனிடம் பேசினேன்.வெளியிடுமாறு தமிழ்நதியை அழைத்தேன்.சந்திராவை பெற்றுக்கொள்ள சொன்னேன்.

 

அடுத்த நாளும் பள்ளியில் பேசியை எடுக்க முடியாத அளவிற்கு வேலை.முந்தினம் துக்கம் பகிர்வதற்கான அழைப்புகளை எடுக்கமுடியவில்லை.இன்று அவள் நினைவாக நடத்தவிருக்கும் நிகழ்ச்சிக்கும் அழைத்து பேசமுடியாமல் இதென்னடா வேலையென நொந்துகொண்டு மாலை அனுமதிபெற்று சீக்கிரம் கிளம்பிவிட நினைத்தேன்.அதற்கும் வழியில்லாமல் பள்ளிமுடிந்து 10 நிமிட தாமதத்தில் அவசர அவசரமாக கிளம்ப அதற்குள் உயிரெழுத்து கடைக்கு வந்த தோழிகளின் அழைப்பு.

 

ஆரம்பிக்க காத்திருந்தோம் சந்திரா வரட்டுமென்று.அப்பாவையும் தோழியையும் காணவில்லையே என நினைக்க சந்திரா வரும் வழியில் விழுந்துவிட்டேன் என்று பேசினாள்.தோழி தமிழ்நதியும் நானும் பதற்றத்தோடு இருந்தோம்.அடைமழை ஆக்ரோஷமாக பெய்து கொண்டிருந்தது.நூலினை விரைந்து வெளியிட்டு அவள் இருக்கும் இடத்திற்கு செல்வோமென பேசிக்கொண்டோம்.நல்லவேளை அடிபலமாயில்லை என்று அவள் சொன்னதால் சற்றே நிம்மதியடைந்தோம்.நண்பர் பாஸ்கர்சக்தியும் தமிழ்நதியும் உங்கதொகுப்பை வெளியிட நினைத்தாலே மழை பெய்கிறதே என தானே வை நியாபகப்படுத்தினர்.

 

அன்று வெளிடுவதாயிருந்த கணேசகுமாரனையும் சந்தானமூர்த்தியையும் காணோம்.சந்தானமூர்த்தி இன்று வெளிடவில்லை என்றார்.கணேசகுமாரன் வந்துகொண்டிருப்பதாக சொன்னார்.அதிகம் காத்திருக்க முடியாமல் வெளியிட ஆயத்தமானோம்.

 

தோழி தமிழ்நதி வெளியிட இயக்குநர் மிஷ்கினும் எங்கள் வாழை அமைப்பின் குருத்து ஆனைக்கவுண்டனும் பிரதியை பெற்றுக்கொண்டார்கள்.என் கவிதைகள் குறித்து தொடர்ந்து கவனித்து வருவதான உரையினை மனுஷ்யபுத்திரன் பேசினார்.அவருக்கு சிலநிமிடங்கள் முன்புதான் தகவல்
சொல்லியிருந்தேன்.நண்பன் நேசமித்திரன் எல்லாமாலைகளிலும் எரியுமொரு குடிசை குறித்து ஆழமான உரைநிகழ்த்தினார்.நிகழ்வு முடியவும் மழை நிற்கவும் சரியாயிருந்தது.
ஏற்புரையில் மருதாம்பாளுக்கு இந்நிகழ்வை சமர்ப்பிக்கும் காரணம் குறித்து சிலவார்த்தைகள் பேசினேன்.இன்னும் சில நெகிழ்வான சம்பவங்கள் பேச இருந்தாலும் வார்த்தைகளால் அவளோடான குழந்தமையும் குதூகலமுமாயிருந்த நொடிகளை விவரிக்க இயலாது.எப்பொழிதும் அறியாமையையும் குழந்தைத்தனமான மனவியல்பையும் நேசிக்கிற தோழி தமிழ்நதி இந்நூலை வெளியிட்டதும்,வாஞ்சையும் நேசமும் மிக்க நண்பர்கள் அங்கு வந்திருந்ததும் அந்த நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கியது……….

 

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ச விஜயலட்சுமி கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s