எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2

ச விஜயலச்சுமி
நாகர்கோவிலில் கண்ணுக்கெட்டிய வரை பசுமையாக இருந்தது.நெரிசலான அமைப்பு இல்லாமல் தனி வீடுகளும் வீட்டுத்தோட்டங்களுமாக தாவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற தன்மையைப் பார்த்தேன். சீக்கிரம் திரும்பி வரமுடியுமென்றால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கே வந்து விடுங்கள் எனக்கூறியிருந்தார் நாஞ்சில்நாடன்.
திருவட்டாறு கோவில் பழமைவாய்ந்தது எனக்கெள்விப்பட்டிருந்தோம்.அங்கு நடைசாத்துவதற்குள் தரிசனத்திற்கு விரைந்து சென்றோம்.கோவிலில் மூன்று வாசல்களில் பெருமாளை பார்க்க வேண்டியிருந்தது.இப்படி மூன்று வாசல்கள் வைத்து தரிசிக்க காரணம் என்னவென்று தெரியவில்லை?அங்கேயே அன்னதானம் வழங்குவதாகவும் விருப்பமிருந்தால் சாப்பிடலாமென்றும் சொன்னார்கள்.சாப்பிட்டுபார்ப்போமென அமர்ந்தோம் குடிப்பதற்கு சுடுநீர் ,அவியல்,பாயசம்,புளிசேரி,இஞ்சிபச்சடி என நாஞ்சில்நாட்டு உணவைப் பரிமாறினர்.மதியவுணவை முடித்துக்கொண்டு தொட்டிப்பாலம் சென்றோம்.
 தொட்டிப்பாலம் ,சிதறால் சென்ற வழித்தடங்கள் அவ்வப்போது நெல்லை மாவட்டத்தின் பத்தமடை நோக்கிய பாதையை நியாபகப் படுத்தியது.பசுமையும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நீரொடையும் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் வீட்டிற்கு சென்றபோது மாலைநேரப்பயணத்தில் பார்த்த தாமிரபரணியும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.வாழையும் தென்னையும் மிளகுமாக இருக்கும் கேரளப்பகுதியைப்போன்றே இருந்தது.
தொட்டிப்பாலத்தில் இருந்து பூமியைப்பார்ப்பது  ஃபிஷ்ஐலென்சிலிருந்து அந்தபகுதியைப்பார்ப்பது போல இருக்கிறது.நகரங்களில் வாழ்பவருக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பில்லை.விருதுநகருக்கு பெண்ணெழுத்து புத்தக வெளியீட்டிற்காக இரயிலில் சென்றபொழுதுதான் நிலப்பரப்பில் தொடுவானம் தொட்டுச்செல்வதைப்பார்த்தேன்.சென்னையில் கடலும் வானும் சேருவதை மட்டுமே பார்த்திருந்த எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது.தொட்டிப்பாலத்தின் உயரத்திலிருந்து நெடுந்தூரம் பார்வையை செல்லவிடுவதும் கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஓடையின் சப்தம்; காற்றின் சீழ்க்கை ஒலியைக்கேட்பது; வெயில் உடலில் பட்டு வெம்மையை உணரும் அதேநேரத்தில் காற்றின் குளிர்ச்சியையும் உணரந்து மகிழ்வதென களிப்புற்றிருந்தேன். கீழிறங்கி சலசலத்த ஓடையில் கால்வைத்தபிந்தான் முழுமை அடைந்ததாயிருந்தது.
சித்றால் மலை ஏறுவது எளிதாயிருந்தது.பாதை படிகளில்லாமல் அமைந்திருந்தது வசதி.அங்கே இருந்தகாவலர் பூட்டிவிட்டு எதிரில் வந்துகொண்டிருந்தார்.சென்னையிலிருந்து வருகிறோமென்றதும் எங்களோடு மீண்டும் மேலேறிவந்து பூட்டிய பகுதியை திறந்து காட்டினார்.மகாவீரர்,பாசுவநாதர்,இயக்கி,பிள்ளையார்,எடுத்தபாதத்தோடான சிலைகள்,கல்வெட்டு என மிகுந்த அர்த்தம் பொருந்தியதான அமைதியைக்கொண்டிருந்தது.கோவிலின் கோபுரத்திற்குமேல் கோபுரத்தைமீறிய உயரத்தில்  பாறையொன்று நின்றிருந்தது.
எதிரில் பாறையில் வெட்டப்பட்ட குளம் இருந்தது.சில்லென்றகாற்று தாலாட்டியது.அங்கேயே நிம்மதியாக படுத்துகொள்ளலாமென தோன்றியது.
காதுகள் சப்தங்களால் உறைந்துபோயிருந்ததிலிருந்து சில மணித்துளிகள் மீண்டதுபோன்ற அந்த அமைதி அப்பகுதியை,கண்ணுக்கெட்டியதூரத்தில் தெரிந்த அடர் பசுமை போர்த்திய வனாந்திரத்தை,
கல்லுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருக்கும் சிலைகளை மேலும் அழகுபடுத்தியது.
பழனிகுமார் அங்கிருந்து பறித்துக்கொடுத்த சில கொத்துமலர்களை காதுகளில் வைத்திருக்க நண்பர்கள் ஆவலோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.அடர்ந்து கிளைத்த மரத்தின் உறுதியும் கம்பீரமும் நம்மை சதா அருகே அழைக்கிறது.அருகே சென்றதும் சற்றும் விலக விடுவதாயில்லை.அதன் ஈர்ப்பில் மரத்தின் மீது ஏறி சில மணித்துளிகள் படுத்திருந்தேன்.பால்யத்தின் நினைவடுக்குகளை அசைத்து என்னை பதின்பருவத்திற்கு அழைத்துச்சென்றது.புளியமரத்திலும், நாவல்மரத்திலும்,மாமரத்திலும், பூவரசமரத்திலுமாக ஏறிகுதித்து ஊஞ்சல்கட்டிவிளையாடிய நாட்களும் அப்பிராயத்து நட்புகளும் சில அலைகளை ஏற்படுத்தின.
குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டுமென்று கிளம்பினாலும் வந்தபோது சீக்கிரம் வந்தோம்.வாகனங்கள் மாலையில் அதிகமாகிவிட்டதால் போக்குவரத்து மெதுவானது.சீக்கிரம் சீக்கிரமென்று வாகனத்தை துரிதப்படுத்தினோம்
………………………………………………………………………………..தொடரும்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ச விஜயலட்சுமி கட்டுரைகள் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2

 1. rathnavel சொல்கிறார்:

  மிகவும் அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

 2. G. Damodaran. சொல்கிறார்:

  Arumayaana Annan veettu thirumanathil yerpatta Payana anubhavam sa vijayalakshmiyin yezhthu yengalaiym payanikka vaithadhu… vaazhthukkal
  Anbudan.
  Damu. G
  Arakkonam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s