உப்பாகிடும் உடலில்

 
 
தொடர்ந்து கேள்விகளால்
அறையப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
கேள்விகள்
மரப்பிசினைப்போல நசநசக்கின்றன
விடையுள்ளவைகளும்
விடையற்ற தருணங்களுமாய்
மற்றுமொரு கேள்வியை
தடுத்துவிட முடிவதில்லை
கேட்டுவிட்டுப் போங்கள்
எதிர் கேள்விகளை
தூசுதட்டி எடுத்துக் கொண்டிருக்கிறேன்
கொத்து வெடிகளும் நிலக்கண்ணிகளும்
சந்தித்துக் கொள்ளட்டும்
சுவாசத்தின் முடிச்சுகளெங்கும்
கந்தகத்தின் வாசம்
கடலின் நீர் முழுவதையும்
வெளியேற்றிவிடத் துடிக்கிறேன்
உப்புக்கரிக்கிறது உடலில்
சுழன்றடிக்கும் என் பேரண்ட
உப்பு வாசனையில்
நிர்கதியாகின்றன
நூற்றாண்டுகளாய்த் தொடரும்
முகமற்றவர்களின் குரல்கள்…
…………………………………………………………………………ச விஜயலச்சுமி
நன்றி: 361
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to உப்பாகிடும் உடலில்

 1. Selvaraj Jegadheesan சொல்கிறார்:

  நல்லாயிருக்குங்க.

 2. rathnavel சொல்கிறார்:

  நல்ல கவிதை.
  வாழ்த்துகள்.

 3. அன்புசிவம் சொல்கிறார்:

  ஹ்ம்… நீங்களும் புரியாத கவிதை எழுத கத்துக்கிட்டீங்களா.. வாழ்த்துக்கள்..

 4. karthikeyan சொல்கிறார்:

  உணர்வின் வெளிப்பாடு அருமை .

 5. G. Damodaran. சொல்கிறார்:

  Thamizh ina unarvum… ullathin urukkamum yezhthil velippaduthiya kavignarukku vaazhthukkal.
  ungalodu serndhu unarvugalai pagirndhu kolla vaaippalithamaikku mikka nanri
  Damu. G
  Arakkonam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s