எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1

சனிக்கிழமை காலையில் இரயில் வள்ளியூரைத்தாண்டிய சிலநிமிடங்களில் தொலைபேசியில் நாஞ்சிலார் அழைத்தார்.வண்டி எங்கே வந்துகொண்டிருக்கிறது என கேட்டவர் இரயில் நிலையம் வந்து சேரும் நேரத்தைக்கூறிவிட்டு நான் இங்கேதான் இருக்கிறேன் மெயின்கேட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார்.
அறைக்கு அழைத்துச்செல்ல காத்திருந்தார்.காலையில் தங்கை சங்கீதாவுடன் இணைந்து நாஞ்சில்நாட்டு சிற்றுண்டி சாப்பிட்டோம்.அங்கிருந்த முக்கிய இடங்களான சிதறால்,தொட்டிப்பாலம்,திருவட்டாறு கோவிலுக்கு சென்றோம். தொட்டிப்பாலத்திலிருந்தும் பார்க்க இயற்கை மொத்தமாய் என்னை சுருட்டி வைத்துக்கொண்டது.இரப்பர் மரங்களைப்பிடிதுக்கொண்டு அதிலிருந்து வடியும் பாலைத்திரட்டிப்பார்த்து மகிழ்ந்தேன்.சிதறால் மலைப்பகுதி இயற்கை செறிவோடு இருந்தது .சிறுபிள்ளையாய் மாறிவிடத்தூண்டியது.மரத்தில் ஏறியும் கோமாளிபோன்றும் விளையாட நண்பர்கள் ஆவலாய் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சிதறால் அனைவரும்  பார்க்க வேண்டிய இடம் தகவல் தந்துதவிய நண்பருக்கு நன்றி .
மாலைமண்டபத்திற்கு கிளம்பினேன் வழியில் சுதீர் கிளம்பிக்கொண்டிருந்தார். எனக்கு எத்தனை பெரிய மகள் என்ற அவர்வார்த்தைகளின் களிப்பு என்னையும் விட்டுவைக்கவில்லை. முருகேசபாண்டியனோடு சிறிதுநேரம் பேசிவிட்டு மண்டபத்துள் நுழைந்தேன்.தொலைவிலிருந்தே நண்பர் சுல்தானை அடையாளம் காண முடிந்தது.எங்களது முதல் சந்திப்பு.மருதுவும் அவர் துணைவியாரும் வாஞ்சையோடு வீட்டுக்கு அழைத்தனர் அவர்களோடு சுல்தானும் கூட்டம் கலைந்தாலும் மண்டபத்திலேயே பொருமையாக இருந்தனர்.தோழிகள் சங்கமித்ததும் உற்சாகம் மேலும் கூடியது.சுல்தானும் சக்திஜோதியின் மகனும் கேமிராவோடு எங்கள் உற்சாகத்தை அழியாத நினைவுகளாக்க படம்பிடித்தனர்.
புகைப்படம்:பரமேஸ்வரி திருநாவுக்கரசு
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ச விஜயலட்சுமி கட்டுரைகள் and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1

  1. rathnavel சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நாங்களும் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் தயார் செய்து விட்டோம். முந்தைய நாள் உடல்நலம் அனுமதிக்கவில்லை. பயணத்தை கைவிட்டு விட்டோம்.
    மனப்பூர்வ வாழ்த்துகள் அம்மா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s